திங்கள், 20 செப்டம்பர், 2010

வெறுமை...!

எழுதுவதற்குப் பலவுள...
எழுகை முதல் படுகை வரை
தொடக்கம் முதல் முடிவு வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
இயற்கை...
அதிற் கொழிக்கும்
இசை...
இயல்...
கலை...
காலம்...
அது தந்த காதல்...
நட்பு...
கால நீட்சியில் விரிந்து செல்லும்
களம்...
புலம்...
அறம்...
மறம்...
மொழி...
வழி காட்டும் நெறி...
மனிதம்...
உறவு...
புனிதம்...
உண்மை...
விருப்பு...
வெறுப்பு...
இப்படி...
எழுதுவதற்குப் பலவுள...
இருந்தும் வெறுமை...!

கார்த்திகை காலம்

காலத்தால் உருவாகி,
கார்த்திகையில் மெருகாகி,
காந்தளெனச் சிரிப்பவரே,
இது உங்களின் காலம்,
கைதொழுவோம் உம் திசையில்...

எனக்கும் உறவே...!

தமிழால் இணைவோம்
தமிழராய் வாழ்வோம்
எந்நாட்டவனெனினும்
தமிழை நேசிப்பதால்
எனக்கும் உறவே!

என்னை தோற்றுவிட்டு...

என்னை வெல்ல
இங்கு யாரும் இல்லை-என்ற
எண்ணத்தில் நான் இருந்தேன்...
இன்று உன்னை பார்த்தவுடன்
என்னை தோற்றுவிட்டு...

மௌனமும் ஒரு கவிதைதான்

எழுத்தில் வடிக்காவிடின் என்ன
மௌனமும் ஒரு கவிதைதான்
புரிபவர்க்குப் புரியும் போது...

உணர்கின்றேன் நான்...

உணர்த்த முயல்கின்றேன்...
உணர்கின்றேன் நான் தோற்பதை
என் அனாகதநாதமே...!

* நாதம் : இசை. இது இருவகைப்படும்: ஆகதம்; அனாகதம் (அநாகதம்).
ஆகதம் (ஆகதநாதம்): அறியப்பட்டது; எல்லோராலும் உணரக்கூடியது; அடுத்தவருக்கு நாம் உணர்வதை எடுத்துக் கூற அல்லது உணர்த முடிவது.
ஆநாகதம் (அநாகதநாதம்): அறியப்படாத ஒன்று; இயற்கையிலேயே உள்ளது; ஞானிகளால் மட்டுமே உணரக்கூடிய இசை; எல்லோராலும் உணர முடியாதது; அதனை உணரக்கூடியவர், தான் உணரும் அவ்வுணர்வை அடுத்தவருக்கு உணர்த்த முடியாதது.

நானே இனி நீ...

நிலமே என் வானம் என்பேன்
நீ நிலவு என்பதால்
நானே இனி நீ என்பேன்
நீ என் உயிர் என்பதால்...